டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் துணைக் கேப்டன் பொறுப்பினை ஏற்க ஷாகின் ஷா அஃப்ரிடி மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை தழுவியதால், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். இதற்குப் பிறகு ஷான் மசூத் பாகிஸ்தானின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷாகின் அஃப்ரிடிக்கு டி20 அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஷாகின் அஃப்ரிடி ஒரு தொடரை மட்டுமே கேப்டனாக வழிநடத்தினார்.இவர் தலைமையில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து ஷாகின் அஃப்ரிடி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாபர் ஆசம் மீண்டும் கேப்டனாக்கப்பட்டார்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஷாகின் அஃப்ரிடிக்கும், பாபருக்கும் இடையே மோதல் இருப்பதாக பல வதந்திகள் இருந்தன. இருப்பினும், பாகிஸ்தான் அணியில் எந்த சலசலப்பும் தெரியவில்லை. ஆனால் இப்போது வந்துள்ள தகவல் இந்த மோதலை வெளிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பாகிஸ்தான் துணைக் கேப்டனாகப் பொறுப்பேற்க ஷாகின் அஃப்ரிடி மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் துணை கேப்டன் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆஸம் கான், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரௌஃப், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயீம் ஆயுப், ஷதாப் கான், ஷகின் ஷா அஃப்ரிடி மற்றும் உஸ்மான் கான்.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!
நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்
ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!