தென்னாப்பிரிக்கா 176 ரன்களில் ஆல் அவுட்; தெறிக்கவிட்ட பும்ரா... வெற்றியின் விளிம்பில் இந்தியா!

By காமதேனு

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதால் ரன்கள் குவிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி நேற்று நியூலாண்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

எய்டன் மார்க்ரம் மட்டும் 106 ரன்கள் விளாசினார்

டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கைல் வெரெய்ன் மட்டும் 15 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

பும்ரா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல் பந்துவீச்சு

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 39 ரன்களுக்கும், சுப்மன் கில் 36 ரன்களுக்கும், விராட் கோலி 46 ரன்களுக்கும் ஆட்டமிருந்தனர். ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியதால் மேற்கொண்டு ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபடா, இங்கிடி, பெர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது தென்னாபிரிக்க அணி தனது 2வது இன்னிங்ஸை துவக்கியது. 2வது இன்னிங்சிலும் ரன்களை குறிக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் தடுமாறினார். நட்சத்திர வீரர் டீன் எல்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் எய்டன் மார்க்ரம் மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தார். 103 பந்துகளில், 17 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 106 ரன்கள் அடித்து இருந்தபோது அவர் முகமது சிராஜ் வந்து பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து மதிய உணவு இடைவேளையின் போது தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகேஷ்குமார் 2 விக்கெட்டுக்களையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். இதையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!

‘இரண்டு வருடமாக நீடிக்கும் விசாரணையில், தேர்தல் நெருக்கத்தில் சம்மன் அனுப்புவது ஏன்?’ கேஜ்ரிவால் கேள்வி

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தமிழகத்தில் மதுவால் கொலை அதிகரிக்கிறது... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE