இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஃபீபி லிட்ச்பீல்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து அலிசா ஹீலியும் சிறப்பான துவக்கத்தை அளித்தார்.
125 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்து ஃபீபி ஆட்டம் இழந்தார். இதேபோல் அலிசாவும் 85 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்பரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இருப்பினும் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமஞ்சோத் கவுர் 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா, பூஜா வஸ்திரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 3 ஓவர்கள் மட்டும் வீசிய மன்னத் காஷ்யப், 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியுள்ளது. 5 ஓவர் முடிவில் தொடக்க வீராங்கனைகள் யஸ்டிகா பாட்டியா, 6 ரன்களுடனும், ஸ்மிருதி மந்தனா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!
அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!
இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!
அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!
13 வயதில் நடந்த பாலியல் தொல்லை... மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!