முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

By காமதேனு

சிறுத்தைத் தாக்கியதில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல் படுகாயமடைந்துள்ளார். அவரது புகைப்படங்களை அவரது மனைவி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல்(51) சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஜிம்பாப்வேயில் உள்ள பஃபேலோ ரேஞ்சில் இருந்து விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது கை விட்டல், மில்டன் பார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கை விட்டல்

அவர் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை கை விட்டல் மனைவி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் விட்டல் கட்டு மற்றும் ரத்தம் தோய்ந்த சட்டை அணிந்துள்ளார். விட்டல் காட்டு விலங்குகளால் பிரச்சினைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல.

கடந்த 2013-ம் ஆண்டு 8 அடி நீள முதலை ஒன்றும் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார். இந்த முதலை விட்டலின் படுக்கைக்கு அடியில் இருந்தது. 150 கிலோ எடையுள்ள அந்த முதலை இரவு முழுவதும் வீட்டில் அயர்ந்து தூங்கியது. மறுநாள் காலை வீட்டின் சமையலறையில் காலை உணவை விட்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​பணிப்பெண் முதலையைக் கண்டு அலறினார். அப்போது தான், விட்டல் வீட்டில் முதலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிறுத்தை தாக்கி அவர் படுகாயமடைந்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் கை விட்டல். இவர் ஜிம்பாப்வே அணிக்காக 46 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கை விட்டல்

ஆல்ரவுண்டராக இருந்த அவர், டெஸ்ட் போட்டிகளில் 2,207 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 2,705 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் 4 சதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விட்டல், டெஸ்டில் 51 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில் 88 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE