வாணவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட்... திணறிய டெல்லி அணி; 266 ரன்கள் குவித்து ஹைதராபாத் சாதனை!

By காமதேனு

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், பவர் பிளேயில் அதிகமான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 வது லீக் போட்டியாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். இவர்கள் இருவரும் டெல்லி பந்துவீச்சாளர்களின் பந்தை துவம்சம் செய்தனர். ஹெட், அபிஷேக் தொட்ட பந்துகளெல்லாம் சிக்சர், பவுண்டரிகளில் விழுந்தது. இவர்களின் இணையை பிரிக்க முடியாமல் டெல்லி பவுலர்கள் திணறினார்கள்.

ஒரு வழியாக குல்தீப் யாதவ் 6.2 வது ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்தார். இதனால் வெறும் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 6 சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அவரின் பந்திலேயே மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டும் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர் 11 பவுண்டரியுடன் 89 ரன்கள் குவித்து வெளியேறினார்.

டெல்லி ஹைதராபாத்

ஹெட் அவுட்டான போது 9 ஓவர்களில் 154 ரன்கள் குவித்திருந்தது ஹைதராபாத் அணி. அதனைதொடர்ந்து கிளாசனும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அதன்பின்னர் ஹைதராபாத் ரன்கள் எடுக்க திணறியது. பிறகு குமார் ரெட்டி 37 ரன்களும், அப்துல் சமது 13 ரன்களும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. சர்பாஸ் அகமது ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்

இந்த போட்டியின் போது பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. ஐபிஎல் மட்டுமின்றி ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே பவர் பிளேயில் அதிகமான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிகழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE