ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்... தடைகளை தகர்த்து சாதித்தார்!

By காமதேனு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிர்கிஸ்தானில் இன்று நடந்த மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவினருக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வெற்றி பெற்றார் 29 வயதான வினேஷ் போகத். இதன்மூலம், ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவில் தனக்கான இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வினேஷ் போகத்

ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், அதற்கும் முந்தைய 2016-ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜனேரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் போகத். முன்னதாக, 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத்

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் ம்ற்றும் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆகியோர் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டபோது அதில் முன்னணியில் வினேஷ் போகத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE