கடைசி நேரத்தில் இந்திய அணியின் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது என்னுடைய கடைசி உலக கோப்பையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் கடைசிநேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். முதன்முறையாக உலக கோப்பை அணி தேர்வு குறித்த பேச்சு எழும்போது அஸ்வின் பெயர் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. திடீரென அக்சர் படேல் காயமடைந்ததால் அதிர்ஷ்ட காற்று அஸ்வின் பக்கம் வீசியது. ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததால், நேரடியாக உலக கோப்பை அணிக்கு தேர்வாகிவிட்டார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று பேசும்போது, “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இந்திய அணியில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக விளையாட்டை ரசிப்பதே எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். இந்த போட்டியில் மீண்டும் அதை செய்ய விரும்புகிறேன். என்னை கேமரா முன் நிறுத்தக்கூடாது என்று மீடியா நபரிடம் சொன்னேன். ஆனால் அவர் உங்களை தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்று சொன்ன காரணத்தினால் வந்தேன். என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டியை அனுபவிக்க வேண்டும். அதனை முழுமையாக செய்கிறேன் என்று நம்புகிறேன். இது எனக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். அதனால், அனைத்து போட்டிகளையும் ரசித்து விளையாடுவதுதான் எனக்கு முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினியை நகலெடுத்த லாரன்ஸ்... ஜெயித்தாரா? ‘சந்திரமுகி 2’ விமர்சனம்!
நடிகர் சித்தார்த்துக்கும் காவிரி பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?... சீமான் ஆவேசம்!
இந்தியா கூட்டணியிலிருந்து விலகுகிறதா ஆம் ஆத்மி? - கேஜ்ரிவால் பதில்!
ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து... மூச்சுத்திணறி தாய், மகள் பலியான சோகம்!