பாகிஸ்தான் தோல்வி... டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By காமதேனு

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனிடையே 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26ம் தேதி துவங்கியது.

ஆஸ்திரேலியா கேப்டன் 10 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

பாக்சிங் டே போட்டியான இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 318 ரன்களும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களும் எடுத்திருந்தது. நேற்று 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் பாகிஸ்தானைவிட 241 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 96 ரன்கள் சேர்த்திருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்ஸை இன்று துவக்கியது. அந்த அணியில் கேப்டன் ஷான் மசூத் 62 ரன்கள் விளாசினார். பாபர் அசாம் 41 ரன்கள் எடுத்திருந்தார். சல்மான் அலி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிற வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் மட்டும் குவித்தது.

இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலா 5 விக்கெட்டுகள் என 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3ம் தேதி துவங்க உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள்!

விஜயகாந்துக்கு செய்வினை வெச்சுட்டாங்க... பீதியைக் கிளப்பிய கங்கை அமரன்!

நன்றி மறந்த வடிவேலு... வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

அதிர்ச்சி... தேசிய விளையாட்டுப் போட்டியில் 25 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE