37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட 25 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மொத்தம் 43 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 80 தங்கம் உட்பட 228 பதக்கங்களைக் குவித்து மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்தது. 19 தங்கம் உட்பட 77 பதக்கங்களுடன் தமிழகம் 10-வது இடத்தைப் பிடித்தது. இதனிடையே, இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பதக்கம் வென்ற 7 பேர் உட்பட 25 வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்படும் வீரர்கள் 2 முதல் 4 ஆண்டுகள் வரை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்படுவார்கள். ஊக்க மருந்து சோதனையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வீரர்கள் சிக்கியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
'கேப்டன்' பெயர் விஜயகாந்திற்குப் பொருத்தமானது... நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைந்தது!
செல்போனை கேட்டதால் விபரீதம்... கணவன் கண்ணில் கத்திரிக்கோலால் குத்திய மனைவி!