சூரியகுமார் யாதவ் பெரிதாக எதுவும் செய்யவில்லை... சுனில் கவாஸ்கர் சுளீர்!

By காமதேனு

ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் இன்னும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி துவங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்த பயிற்சி போட்டிகள் கவுகாத்தி, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

இந்த நிலையில் இந்திய அணி தமது முதல் பயிற்சி போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் இரவு நெடுநேரம் கழித்து இறுதியாக உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் படேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே தற்போது சிறப்பான பார்மில் உள்ளனர். இந்த காரணத்தினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த முறை இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

ஆனாலும் தற்போது விளையாடும் அணியில் பிளேயிங் லெவனில் யார் இடம்பிடிப்பார்கள் என்பதுதான் சற்று குழப்பமாக இருக்கிறது. இது குறித்து கவாஸ்கர் கூறும் பொழுது, "ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் இன்னும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர் இறுதியாக 15 முதல் 20 ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்கிறார். இதற்கு அவர் தனது டி20 திறன்களை பயன்படுத்துகிறார். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

ஆனால் ஹர்திக், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் யாரும் இவர் செய்யும் வேலையை செய்ய முடியும். எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு நான்காம் இடம் உறுதியான ஒன்று. சூரியகுமார் காத்திருக்க வேண்டும். அவருக்கு நான்காம் இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெரிய சதம் அடிக்க வேண்டும். அவர் தன்னால் ஒரு சதம் அடிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!

அதிர்ச்சி... முதல்வரின் வீடு மீது தாக்குதல் முயற்சி; துப்பாக்கிச் சூடு!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE