ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 283 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி அபாரமாக கைப்பற்றியது. இதையடுத்து, இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
3 விக்கெட்டுகளை இழந்து அணியின் ரன் 57 ஆக இருந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிகஸ் களத்திற்கு வந்தார். அதிரடியாக ஆடிய அவர் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். மற்றொருபுறம் விக்கெட்டுகள் சரிய 9 விக்கெட்டிற்கு ஆட வந்த பூஜா வஸ்திரகர், ஜெமிமாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். ஜெமினா 82 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா கடை வரை ஆட்டமிழக்காமல் இருந்து 62 ரன் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர், ஜியார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!
பி.எஃப் முன்பணம் இனி எடுக்க முடியாது... ஊழியர்கள் அதிர்ச்சி!
50,000 பேர் திரள்கிறார்கள்... சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்!
அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்!
அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்... வைரலாகும் விஜயகாந்த் வீடியோக்கள்!