உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அக்சர் படேல் வருவாரா? - இன்று தெரியும்!

By காமதேனு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணியில் அக்சர் படேல் இடம் பெறுவாரா அல்லது அனுபவம் மிக்க அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது தெரிந்து விடும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இறுதி செய்யப்பட்ட 15 வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் வெளியிடுமாறு அணிகளை கேட்டுக் கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்திய அணி இந்த பட்டியலை வெளியிடவுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அக்சர் படேல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காயம் குணம் அடைவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்றால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் இணைக்கலாமா என்ற ஆலோசனையில் பிசிசிஐ உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

அஷ்வின், அக்சர் படேல் இருவரும் ஆல் ரவுண்டர்கள். இருப்பினும், அக்சர் படேல் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என்பதால் இந்திய அணிக்கு அவர் அதிகம் தேவைப்படுவதாக வல்லுனர்கள் கூறியுள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இஷான் கிஷனை தவிர்த்து கில், ரோஹித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், என முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் வலது ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

இதனால் எதிரணிக்கு இந்திய அணியை வீழ்த்துவதற்கான வியூகம் எளிதாகும் என்று கருதப்படுகிறது. இதனால் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. அவர் அணியில் இடம்பெற்றால் 8 ஆவது வீரராக களத்தில் இறங்குவார். தற்போது காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ். இவர்களுடன் அக்சர் படேல் அல்லது அஷ்வின் அணியில் இடம்பெறுவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE