தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் நேற்று சென்சூரியனில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் - எல்கர் களமிறங்கினார். மார்க்ரம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து எல்கருடன் டோனி டி ஜோர்ஜி ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் எல்கர் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 93 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தது. இதனால், இந்திய அணிக்கு விக்கெட் வீழ்த்திய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், விராட் கோலி ஸ்டெம்பிள் இருந்த பெய்ல்சை மாற்றி வைத்தார். மாற்றி வைத்த முதல் பந்தை டோனி டி ஜோர்ஜி பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை பும்ரா சிறப்பாக இன்ஸ்விங்கராக வீச, அதில் ஜோர்ஜி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு முன்பு ஸ்டூவர்ட் பிராட் இரண்டு பெய்ல்சை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். அடுத்த பந்தில் அவர் விக்கெட் வீழ்த்தினார். அதேபோல், கோலியும் செய்ய, 2 பந்துகளில் விக்கெட் கிடைத்துள்ளது. தற்போது இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இமானுக்குப் பதில் சொன்ன சிவகார்த்திகேயன்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அதிர்ச்சி... விஜய் நடிக்கும் 'தளபதி 68’ பட பிரபலம் மரணம்!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: காவல் துறை அதிரடி அறிவிப்பு!