வங்கதேச அணி வரலாற்று வெற்றி! சொந்த மண்ணில் வீழ்ந்த நியூசிலாந்து அணி அதிர்ச்சி

By காமதேனு

நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக டி20 போட்டி ஒன்றில் வென்று வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ஒரு நாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்ற போதும், முதல் முறையாக ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் முதல் 20 ஓவர் போட்டிகள் இன்று மெக்லின் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில், துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஜேம்ஸ் நீஷம் மட்டும் நிலைத்து நின்று ஆடி 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இருபது ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து இருந்தது. ஷாரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மஹடி ஹசன் முஸ்தபிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. இந்த அணியிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த போதும் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய லிட்டன் தாஸ் இறுதி வரை நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்தார். இறுதியில் அவருடன் ஜோடி சேர்ந்த மஹடி ஹசன் 16 பந்துகளில் 19 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 18.4 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து வங்கதேச அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி 20 ஓவர் போட்டிகளை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இமானுக்குப் பதில் சொன்ன சிவகார்த்திகேயன்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

அதிர்ச்சி... விஜய் நடிக்கும் 'தளபதி 68’ பட பிரபலம் மரணம்!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: காவல் துறை அதிரடி அறிவிப்பு!

அதிர்ச்சி... தமிழகத்தில் 4 பேருக்கு ஜே.என்.1 கொரோனா!

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தேதி அறிவிப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE