சென்னை சூப்பர் கிங்ஸ்-லிருந்து வெளியேறும் முக்கிய பந்துவீச்சாளர்... அதிர்ச்சியில் அணி நிர்வாகம்!

By காமதேனு

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் , அணியிலிருந்து வெளியேறவிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. தற்போது சென்னை அணியில் வெறும் இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் இலங்கை அணியின் பதிரானா, மற்றொருவர் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆவர்.

முஸ்தஃபிசூர் ரஹ்மான்

இந்த தொடரில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து பதிரானாவும், இவரும் சிறப்பாக பந்துவீசி எதிரணிகளை பதம் பார்த்து வருகின்றனர். இப்போது இந்த இருவரையும் நம்பிதான் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு இருக்கிறது. இந்த நிலையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மே மாதம் முழுவதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மே மூன்றாம் தேதி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அதன்பிறகு முஸ்தஃபிசூர், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டி20 உலக கோப்பைக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் தேவைப்படுவார் என்பதால் அவரை மீண்டும் ஐபிஎல் தொடருக்கு அனுப்ப போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே முஸ்தஃபிசூர் ரஹ்மான் மே ஒன்றாம் தேதி சிஎஸ்கே விளையாடும் போட்டியில் பங்கேற்பதே அவரில் கடைசி போட்டியாக இருக்கும். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிடுவார்.

முஸ்தஃபிசூர் விலகல் என்பது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்தஃபிசூர் ரஹ்மான் நடப்பு தொடரில் சிஎஸ்கே அணிக்காக இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE