39 பந்துகளில் சதம் நொறுக்கிய டிராவிஸ் ஹெட்... ஹைதராபாத்தின் 287 ரன்கள் எனும் இமாலய சாதனை; ஆர்சிபி பரிதாபம்!

By காமதேனு

ஐபிஎல் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஆர்சிபி அணிகள் மோதி வரும் நிலையில் சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. அதேபோல டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். எடுபடாத ஆர்சிபி பந்துவீச்சால், அபிஷேக் சர்மாவை அவுட் செய்யவே 8வது ஓவர் வரை பயணிக்க வேண்டியிருந்தது.

க்ளாசன்

இதற்கிடையே அதிரடி ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு 41 பந்துகளில் 102 ரன்களை குவித்துள்ளார். அவர் அவுட்டாகி சென்றாலும் க்ளாசன் அரைசதம் அடித்து தெறிக்கவிட்டார். உடன் எய்டன் மார்க்ரமும் நிதானமாக ஆடினார். க்ளாசன் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மார்க்ரம் 32 ரன்களுடனும், அப்துல் சமது 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல், ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 287 ரன்கள் எடுக்க உதவினார்கள். பெங்களூரு அணி 288 ரன்கள் என்ற இலக்கோடு விளையாடி வருகிறார்கள்

கோலி

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் 277 ரன்களை அடித்து, ஆர்சிபியின் 263 ரன்கள் சாதனையை முறியடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாது. அதனை தொடர்ந்து இன்றைய ஆர்சிபியுடனான போட்டியில் 287 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து, குறைந்த பந்துகளில் சதமடித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கெனவே கிறிஸ் கெய்ல் 30 பந்துகளிலும், யூசுப் பதான் 37 பந்துகளிலும், டேவிட் மில்லர் 38 பந்துகளிலும் சதமடித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE