ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா தனது 3 வது தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
குதிரையேற்றத்தில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. சீனா மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் விபுல் சேடா, அனுஷ் அகர்வாலா ஆகிய நால்வர் அணி மொத்தம் 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
மூன்றாவது நாளான இன்று இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.