உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை வெளியிட்டது ஐசிசி!

By காமதேனு

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மோதும் பெரும்பாலான அணிகள் தங்கள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் எந்த அணி இந்த உலகக் கோப்பையில் வெல்லும் என்ற விவாதம் இணையதளத்தில் காரசாரமாக உலா வருகிறது. தொடர் ஆரம்பிக்க இன்னும் பத்து நாட்களே உள்ளதால் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடர் முழுவதும் இந்திய ஆடுகளங்களில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE