டெஸ்ட் போட்டியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்: இதுதான் காரணமா?

By காமதேனு

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்

2 தொடர்களை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணி, இந்த தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 2 தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக வெல்ல தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய துவக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான ருதுராஜ் திடீரென டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஒருநாள் போட்டி தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்

2வது ஒருநாள் போட்டியின் போது பந்தை பிடிக்க பாய்ந்த ருதுராஜின் விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால் அவர் 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் காயம் சரியாகததால், அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி!

செய்யாத குற்றத்திற்கு 48 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த கொடுமை!

நெகிழ்ச்சி வீடியோ... சாண்டா கிளாஸாக சென்று சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த அமைச்சர் ரோஜா!

மகளைக் கொன்று, கிணற்றில் வீசிவிட்டு சரண்டைந்த தாய்!

தீ விபத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பேரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE