இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீராங்கனைகளின் பாலியல் புகாரை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் ராஜினாமா செய்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த சம்மேளனம் தடை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இதற்கிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயாரானது. ஆனால், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான இவர், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை ஆதரவாளராக உள்ளார். சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கடைசி நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 2019 முதல் இவர் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலாளராகவும் இருந்தார்.
இன்றைய தேர்தலில் சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ஷியோரன் 7 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதையும் வாசிக்கலாமே...
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!
நீதிமன்றத்தில் கதறியழுத பொன்முடி மனைவி!
கிறிஸ்துமஸ் 2023 | ஜொலிஜொலிக்கும் மாளவிகா மோகனன்!
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!
நெகிழ்ச்சி... ஏலத்துக்கு வந்த பள்ளி மாணவனின் வீடு... மீட்டுக் கொடுத்த சக நண்பர்கள், ஆசிரியர்கள்!