இந்தியா – இலங்கை இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும்? யாருக்கு சாதகம்?

By காமதேனு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா – இலங்கை இடையேயான இறுதிப்போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று மழை குறுக்கிட்டால், போட்டி நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து நாளை தொடங்கும்.

ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரிசர்வ் டே முறையில் அடுத்த நாள் நடத்தப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இறுதிப் போட்டியிலும் அதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அப்படி ரிசர்வ் டே-விலும் மழை பெய்தால் பட்டமானது இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். விதிகளின்படி, இறுதிப் போட்டியின் முடிவைப் பெற, இரு அணிகளும் குறைந்தது 20-20 ஓவர்கள் விளையாடுவது அவசியம்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் அடைந்த தீக்ஷனாவுக்கு பதில் இறுதிப் போட்டியில் சஹான் ஆராச்சிகே சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், காயம் அடைந்த இந்திய வீரர் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE