ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி, 346 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மிட்செல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 107 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 487 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ரம் ஷாசத் இரண்டு விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி மற்றும் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், அப்துல்லா மற்றும் இமாம் உல் ஹக் நிதானமாக விளையாடினர். இருப்பினும் அப்துல்லா 48 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 38 ரன்களுடன், குர்ரம் ஷாசத் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான அணி ஆஸ்திரேலியாவை காட்டிலும் 355 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!
ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஆபாச வீடியோ... டீப் ஃபேக் வீடியோக்களால் கதறும் நடிகைகள்!
மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்!
புதுவீட்டில் குடியேறிய 10 நாட்களில் தம்பதி தற்கொலை... கரூர் அருகே சோகம்!