தனக்கும் தோனிக்கும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய ஜாம்பவான் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைப்பதுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இறுதிப் போட்டி வரை அதிக முறை தகுதி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னாவாகத்தான் இருப்பார்.
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா 2021ம் ஆண்டு சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா பங்குபெற்றும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.இதன் காரணமாக தற்போது சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் சிஎஸ்கேவின் முக்கிய வீரராக இருந்த நீங்கள் ஏன் திடீரென்று ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். உங்களுக்கும் தோனிக்கும் ஏதேனும் பிரச்சினையா என சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, எனக்கும் தோனிக்கும் பிரச்சினையா என்பதை நீங்கள் தோனியிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நான் ஓய்வு பெற்றதற்கு அது காரணம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு எனக்கு மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஊக்கம் கிடைக்கவில்லை. எந்த ஒரு உத்வேகமும் இன்றி நான் இருந்தேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய சிறு வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கியவாறுதான் படித்தேன். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினேன். சிறுவயதில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால் குடும்பத்துடன் நான் நேரம் செலவிட்டதே கிடையாது.
தற்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம் என் குடும்பத்தையும் என்னுடைய பெற்றோர்களையும் நான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். இதற்காகத்தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனி குறித்தும் மற்றும் ஐபிஎல்லில் இருந்து விலகியது குறித்தும் ரெய்னா பேசியதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் ரெய்னா எதையோ ஒரு விஷயத்தை மறைத்து பேசுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்!
கனிமொழி, ஜோதிமணி உள்பட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
கதறிய தொண்டர்கள்... வீல் சேரில் வந்த விஜயகாந்த்!
பகீர் வீடியோ... பேருந்தை முந்த முயன்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!