மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை போட்டியின் போது தல தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் சென்று விழுந்த 2 இருக்கைகளை ஏலம் விட போவதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்க உள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுவென நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்துடன் நுழையப்போகும் அணி எது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இறுதி போட்டியின் போது தல தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் சென்று விழுந்த 2 இருக்கைகளை ஏலம் விட போவதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.