3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

By KU BUREAU

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77, ஸ்டீவ் ஸ்மித் 60 ரன்கள் சேர்த்தனர். 305 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து 37.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. கேப்டன் ஹாரி புரூக் 94 பந்துகளில், 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 110 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 33 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். முன்னதாக வில் ஜேக்ஸ் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார்.

மழை தொடர்ந்து பெய்ததால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 37.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 209 ரன்களை எடுத்திருந்தாலே போதுமானதாக இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE