ஆணி படுக்கையில் படுத்தபடி கான்கிரீட் கற்கள் உடைப்பு; கின்னஸ் சாதனை படைத்த பொறியாளர்!

By காமதேனு

ஆணி படுக்கையில் படுத்தபடி 3 நிமிடங்களில் 80 கான்கிரீட் கற்களை உடைத்ததன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் மதுரையை சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

ஆணிப்படுக்கையில் சாதனை

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் விஜய் நாராயணன். டேக்வாண்டோ விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தினால் தனது 23 வயதில் இருந்து இந்த பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

தற்போது புதிய சாதனையாக ஆணி படுக்கையில் படுத்தபடி உடலின் மேல் பகுதியிலும் ஆணி பலகையினை வைத்து அதன் மேல் வைக்கப்பட்ட கான்கிரீட் கற்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன்படி 3 நிமிடங்களில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை நிகழ்த்தினார் விஜய் நாராயணன். ஏற்கனவே 50 கான்கிரீட் கற்களை உடைத்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது 80 கான்கிரீட் கற்களை உடைத்த விஜய் நாராயணனின் சாதனையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE