ஒத்துழைக்குமா வானிலை?: இந்தியா - தென்னப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்!

By காமதேனு

தென்னப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் தென்னப்பிரிக்காவுடன் இன்று மோதுகிறது. எலிசபெத் நகரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணி

தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டி நேற்று முன்தினம் (டிசம்பர் 10) டர்பனில் தொடங்கியது. ஆனால், அங்கு நிலவிய மழை காரணமாக டாஸ் போடாமல் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மழைத் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், இந்த டி 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (டிசம்பர் 12) நடைபெற உள்ளது. இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. அதேநேரம், தங்கள் சொந்த நாட்டில் நடைபெறும் போட்டி என்பதால் தென்னாப்பிரிக்க அணியும் முழு பலத்துடன் களம் காண்கிறது.

மைதானம்

அந்த வகையில் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதேநேரம் இந்த ஆட்டத்தின் போதும் மழையின் குறிக்கீடு இருக்கும் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதேபோல், போட்டி நடைபெறும் போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12-ம் தேதி சராசரியாக 30 சதவீத மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மழை படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தான் போட்டி தொடங்குகிறது. ஆனால், அப்போது 32 சதவீத என்றளவுக்கு குறையும் மழையின் அளவு இரவு 7 மணி முதல் 10 மணி வரை சராசரியாக 5 சதவீத மட்டுமே பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி மழை பெய்வது போன்ற சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE