சச்சின் செத்துடுவாருன்னு நெனைச்சேன்... பாகிஸ்தான் பந்துவீச்சாளர் திமிர் பேச்சு!

By காமதேனு

சச்சின் டெண்டுல்கரின் உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தும் வகையில், வேண்டுமென்றே தான் நான் பந்து வீசினேன். அவருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாக இருந்தது என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயம் அக்தரின் வீடியோ ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் பேசிய அவர், "அந்தப் போட்டியில் உண்மையிலேயே நான் சச்சினை காயப்படுத்த விரும்பினேன் என்பதை இன்று வெளிப்படுத்த விரும்புகிறேன். அந்த போட்டியில் சச்சினை எப்படியும் காயப்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

எனவே நான் வேண்டுமென்றே அவரது ஹெல்மெட்டில் அடித்தேன், அவர் (சச்சின்) இறந்து விடுவார் என்று கூட நினைத்தேன்… நான் ரீப்ளேவில் பார்த்த போதும், பந்து அவரது நெற்றியில் பட்டதைக் கவனித்தேன்… பின்னர் மீண்டும் நான் அவரை காயப்படுத்த முயற்சித்தேன்” என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து ஷோயப் அக்தர் ஒப்புக்கொண்டது இது முதல் முறையல்ல. அக்டோபர் 2021 இல் ஸ்போர்ட்ஸ் டாக் என்ற சேனலிடம் பேசிய அவர் “ 2006 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பைசலாபாத் டெஸ்ட் போட்டியின் போது மகேந்திர சிங் தோனியிடம் வேண்டுமென்றே பீமர் பாலை வீசினேன்’’ ஷோயப் அக்தர் ஒப்புக்கொண்டார்.

தோனி

இதுகுறித்து “பைசலாபாத்தில் தோனியுடன் விளையாடும் போதும், வேண்டுமென்றே அவர் மீது பீமரை வீசினேன். தோனி மிகவும் நல்ல மனிதர், நான் அவரை மதிக்கிறேன். ஆனால் நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று தற்போது கவலைப்படுகிறேன். நான் ஏன் அவரை தாக்க முடிவு செய்தேன்? பந்து தோனியைத் தாக்கியிருந்தால், 2005ம் ஆண்டிலேயே அவர் கடுமையாக காயப்பட்டிருப்பார்” என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டியின் போது பீமர் பந்து வீசுவது என்பது கிரிக்கெட் விதிகளை மீறும் செயலாகும். பீமர் பந்து வீசினால், பந்து வீச்சில், பந்து பவுன்ஸ் ஆகாது, மேலும் பந்து வீச்சாளரால் உயரமாக வீசப்படும். அத்தகைய பந்து வீச்சு ஒரு பேட்ஸ்மேனுக்கு தலை மற்றும் முகத்தில் காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி தெரிந்திருந்தும் ஷோயப் அக்தர் தான் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE