ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரின் முக்கிய ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் அரை சதம் கடந்த நிலையில், ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய கோலி மற்றும் கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா 24.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் மழை கைவிடப்பட்டது. இந்த போட்டிக்காக ஏற்கெனவே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்ததால், போட்டி இன்று நடைபெறுகிறது. ஆனால், ஆடுகளத்தில் உள்ள ஈரம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.