நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி முன்னிலை:டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற தீவிரம்!

By காமதேனு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச மணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூஸிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது.

நியூசிலாந்து- வங்கதேசம் அணிகளுக்கிடையே நடந்த டெஸ்ட போட்டி

இதனிடையே கடந்த 6-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் துவங்கியது. போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிசை துவங்கிய வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 நாட்களை எடுத்தார். நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹாசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நியூசிலாந்து- வங்கதேசம் அணிகளுக்கிடையே நடந்த டெஸ்ட போட்டி

அப்போது வங்கதேச அணி 117 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் துவங்கியது. நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்த அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் வங்கதேசத்தை காட்டிலும் 8 ரன்கள் அந்த அணி முன்னிலை பெற்று இருந்தது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக 3வது நாள் ஆட்டம் நிறைவு

இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து 3வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி நியூசிலாந்து காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாகிர் ஹாசன் 16 ரன்களுடன், சோமினுல் ஹாக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் வென்றாலும், டிரா செய்தாலும் வங்கதேச அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி! இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விஜய் பட வில்லன்!

அரசு பேருந்து மோதி நொறுங்கிய கார்: 5 பேர் பலியான பரிதாபம்!

பண மோசடி... நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்!

மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா மோகன்!

இதைக்கூட தின்பார்களா... தினமொரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை ரசித்து ருசிக்கும் விசித்திரப் பெண்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE