மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் வயலட்டா மிதுல். 26 வயதான இவர் அந்நாட்டு தேசிய அணிக்காகவும், ஐஸ்லாந்து நாட்டின் கிளப் கால்பந்து அணி ஒன்றிற்காகவும் விளையாடி வந்தனர். இதுவரை 40 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் ஐஸ்லாந்தில் உள்ள வாப்னாப்யூர் என்ற மலைத்தொடரில், மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மால்டோவா கால்பந்து அணி நிர்வாகம் உள்ளிட்டவை தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளன. மேலும், கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் அழ்ந்துள்ளனர்.