இந்திய வீரர் சர்பராஸ் கானின் தந்தைக்கு மஹிந்திரா தார் ஜீப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசளித்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சர்பராஸ்கான் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. அதில், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் சர்பராஸ் கான் அறிமுகமானார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக சர்பராஸ்கானுக்கு டெஸ்ட் தொப்பி வழங்கப்பட்டது. அந்த தொப்பியை அவர் தனது தந்தையிடம் அளித்தார். அதை வாங்கிய அவர் உணர்ச்சிப் பெருக்கில் தொப்பிக்கு முத்தமிட்டார். மேலும், அவர் மகனை ஆரத்தழுவி கண்ணீர் வடித்தார். இந்த மனதை உருக்கும் காட்சி, கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்தது. இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவியது.
சர்பராஸ் கான் அண்டர் 14 காலத்தில் இருந்தே மும்பை மாநில கிரிக்கெட்டில் நுழைந்து, இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்தார். அதன் பின் ரஞ்சி ட்ராபி தொடரில் ரன் வேட்டை நடத்திய அவர், உலக அளவில் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி (69) வைத்திருந்தார். கடந்த 7 ஆண்டுகளாக ரஞ்சி ட்ராபி தொடரில் சாதித்தும், கடும் போராட்டத்துக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முக்கிய காரணம் சர்பராஸ் கானின் தந்தை நௌஷத் கான் காரணம். கிரிக்கெட் பயிற்சியாளரான நௌஷத் கான், மகன் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அந்த கனவு நனவாகியதால், மைதானத்தில் கண்ணீர் வடித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்து சர்பாராஸ் கானின் தந்தையை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இந்த வீடியோ மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றது. சர்பராஸ்கான் மற்றும் அவரது தந்தையை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, சர்பராஸ்கானின் தந்தைக்கு ஒரு காரை பரிசளிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்று அசத்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானை பாராட்டும் வகையில் அவரது தந்தைக்கு, மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தார் ஜீப்பை பரிசளித்தார். அந்த புகைப்படத்தை சர்பராஸ் கான் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?
சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!
மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!
முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!
ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!