ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகல தொடக்கம்: சென்னையில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம்!

By சிவசங்கரி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று மாலை தொடங்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை அறிமுக நிகழ்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 17-வது சீசன் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

இதேபோல், 26-ம் தேதி சென்னை அணி, குஜராத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிகளை முன்னிட்டு போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே நாளையும், வருகிற 26-ந்தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

அதன்படி, ’சென்னை பாரதி சாலையிலிருந்து வரும் வாகனங்கள், விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள், விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் செல்ல அனுமதி இல்லை. அதேபோல், பெல்ஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாலாஜா சாலை பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து, பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், பெல்ஸ் சாலைகளுக்குச் செல்லாமல், வாலாஜா சாலைக்கு செல்லலாம். பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சாலை செல்வதற்கு அனுமதி இல்லை. வாலாஜா சாலையிலிருந்து வரும் வாகனங்கள், பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE