விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!

By காமதேனு

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி ஆகியோரின் சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரோக் 71 ரன்களும், ஜாக் க்ராவுலி 48 ரன்ங்களும், சால்ட் 45 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் ஷாய் ஹோப்

அடுத்த ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்சர்களை அடித்து அவர் ரசிகர்களை மகிழ்வித்தார். தொடக்க வீரர் அலிக் அதான்ஜா 66 ரன்களும், ரொமரியோ ஷெப்பர்ட் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவ் ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் விராட் கோலி ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE