மழை குறுக்கீடு... இந்தியா - நேபாள் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!

By காமதேனு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த இந்திய அணியுடன், நேபாள அணி மோதிய நிலையில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

பல்லகெலெவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நேபாளம் அணி, 37.8 ஓவருக்கு 178 ரன் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போட்டி ரத்தனால், இந்திய அணி எந்த போட்டியிலும் வெல்லாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடனான முந்தைய ஆட்டமும் மழை காரணமாக ரத்தானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE