திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.
ஆடவர், மகளிர் என தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழகம், டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 64 அணிகள் பங்கேற்றன.
4 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டி தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு, தொடங்கி வைத்தனர். இந்திய அளவிலான ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. மகளிர் பிரிவில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.