விராட் கோலி தான் பெஸ்ட்... பாகிஸ்தான் ரசிகையின் க்யூட் வீடியோ!

By காமதேனு

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியாக கருதப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ரசிகர்கள் இலங்கைக்கு படையெடுத்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டாலும், போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகை ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடியை தனது கன்னங்களில் வரைந்து, போட்டியை காண வந்த அந்த இளம்பெண், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்காக போட்டியை காண வந்ததாக பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதாக கூறினார். இதைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ரசிகர் ஒருவர் அதற்கு ஆட்சோபனை தெரிவிக்க முற்பட்டபோது, அந்த இளம்பெண் உங்களது அண்டை பகுதியினரை நேசிப்பதில் தவறில்லை என்று அசராமல் பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமா? இந்தியவின் விராட் கோலியா? உங்களது ஆதரவு யாருக்கு என அந்த பெண்ணிடம் கேட்டபோது, "விராட் கோலிதான் எனது பேவரிட் வீரர். அவருக்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். அவர் சதம் அடிக்காமல் போனது ஏமாற்றம் அளித்தது" என்று பதில் அளித்தார். அந்த இளம் பெண் ரசிகையின் கருத்தை இந்திய ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE