ஐ.பி.எல். 2024 தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் இவர்கள்தான்..

By சிவசங்கரி

2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா வரும் 22ம் தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடைபெற உள்ளது.

ஐபிஎல் கோப்பை

17-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் கடந்த 18ம் தேதி ஆன்லைனில் விற்கப்பட்டது. இதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 22-ஆம் தேதி மாலை ஐபிஎல் 2024-ஆம் ஆண்டின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடக்கும் தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் ஆகியோரும் வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE