ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ஸ்ரேயாஸ் ஐயர்? - கொல்கத்தா அணி விளக்கம்!

By காமதேனு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இதுவரை 16 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அணி கோப்பை பக்கம் செல்லவே இல்லை. அந்தளவுக்கு அந்த அணியின் ஆட்டம் இருந்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா அணி தீவிரமாக உள்ளது. மூத்த வீரர் கவுதம் காம்பீர் மென்ட்ராக இணைந்துள்ளார். அணியின் வெற்றிக்கு அவரது வழிகாட்டுதல் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய வீரராக உள்ளார். சமீபத்தில் முடிந்த ரஞ்சி கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்காக விளையாடிய அவர், 95 ரன்களை அடித்து வெற்றிக்கும், தொடரை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார். அப்போது மைதானத்தில் அவர் போட்ட ஆட்டம் வைரலானது. அந்த ஆட்டத்தில் அவரது முதுகில் வலி ஏற்பட்டது. இதனால், சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்தது.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஸ்ரேயாஸ் விளையாட முழுதகுதியோடுதான் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விளையாட எந்த தடையும் இல்லை. தாராளமாக ஆடலாம் என்று பச்சைக்கொடி காட்டினர். இதனால், ஸ்ரேயாஸ் விளையாட உள்ளதால், கொல்கத்தா அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE