ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கிப்போட்டி... ஓமனை வீழ்த்தியது இந்தியா!

By காமதேனு

5 பேர் கொண்ட ஹாக்கி உலகக்கோப்பை தகுதி சுற்றில் ஓமன் அணியை 12-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் 15-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தநிலையில் இன்று இந்திய அணி 2-வது போட்டியில் ஓமன் அணியுடன் மோதியது. இதில் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 12-2 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரஹீல் முகமது, ராஜ்பர் பவன் மற்றும் சிங் மனிந்தர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினர். இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இன்றிரவு பலபரீட்சை நடத்த உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE