உலக கோப்பைக் கிரிக்கெட்... சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை!

By காமதேனு

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக் 5ம்தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. சென்னையில் அக் 8 ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள்

நாளை இரவு 8 மணி முதல் டிக்கெட்டுகள் ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே ஐசிசி ஸ்பான்சரான மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் நேற்றே டிக்கெட் விற்பனை தொடங்கியது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE