சூடுபிடிக்கும் ஐபிஎல் களம்... கொல்கத்தா அணியும் பூஜை போட்டாச்சு!

By காமதேனு

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூஜை செய்து தங்களது பயிற்சியை தொடங்கினர்.

பூஜை போடும் கொல்கத்தா அணி வீரர்கள்

17-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தை ஆக்கிரமித்தன. அந்த வரிசையில் தற்போது, கொல்கத்தா அணியினர் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக அவர்கள் கிரிக்கெட் உபகரணங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE