உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று பிரனோய் சாதனை!

By காமதேனு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய். அரை இறுதியில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விடிட்சர்னுடனான போட்டியில் பிரனோய் தோல்வியைத் தழுவினார்.

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஒற்றையர் அரை இறுதியில் மூன்றாம் நிலை வீரரான தாய்லாந்து வீரர் குன்லாவுட் விடிட்சர்னுடன் விளையாடினார் பிரனோய். அதில் 18-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தார். அதனால் வெண்கல பதக்கத்துடன் நடப்பு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை அவர் நிறைவு செய்துள்ளார். தங்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக பிரனோய் ஆட்டத்துக்கு பிறகு தெரிவித்தார்.

பிரனோய்

முன்னதாக, கால் இறுதியில் பிரனோயும், நடப்புச் சாம்பியனும், போட்டியின் முதல் நிலை வீரருமான விக்டர் அக்செல்சனுடும் (டென்மார்க்) விளையாடினர். இதில் பிரனோய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE