ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை... மைதானத்திலேயே குத்தாட்டம் போட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

By காமதேனு

இந்தாண்டுக்கான ரஞ்சி தொடரை மும்பை அணி வென்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு வெற்றி உற்சாகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோடியுடன் ஸ்ரேயாஸ்

கடந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது, பிரதமர் மோடி இந்திய வீரர்களை சந்தித்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பிரதமரை மதிக்காத வகையில் நின்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல சமீபத்தில், ரஞ்சி போட்டியில் ஆடாததால், பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் அதிரடியாக நீக்கியது. இது பிரதமரை மதிக்காததால், ஸ்ரேயாஸ்க்கு கிடைத்த தண்டனை என்று விமர்சிக்கப்பட்டது.

ஜெய் ஷா

ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஸ்ரேயாஸ், விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மீண்டும் ரஞ்சி தொடரில் விளையாடினார். ரஞ்சி தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய ஸ்ரேயாஸ், ஆரம்பத்தில் தடுமாறினாலும், கடைசி இன்னிங்ஸில் 11 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் விளாசினார். ஸ்ரேயாஸ் மற்றும் முசீர்கானில் அபார ஆட்டத்தால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸிஸ் 418 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய விதர்பா அணி, 368 ரன்களுள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 2024 ரஞ்சி தொடரில் மும்பை அணி வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஆட்டம் முக்கிய பங்காற்றியது.

ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியதால் மைதானத்தில் மும்பை அணி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தார். அப்போது, ஸ்ரேயாஸ் அதிரடியாக குத்தாட்டத்தை போட்டு, மும்பை அணி வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார். ரஞ்சிப் போட்டியில் விளையாடாததால், ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியதற்கு பிசிசிஐக்கு பதிலடி கொடுப்பதாகவும், மைதானத்தில் இருந்த பிசிசிஐ நிர்வாகிகளை வெறுப்பேற்றும் விதமாகவும் ஸ்ரேயாஸ் குத்தாட்டம் போட்டு பழியை தீர்த்துக் கொண்டதாக அவரது ரசிகர்கள் கருத்துகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!

அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை... நடிகை வரலட்சுமி ஆவேசம்!

புடவை கட்டி பீர் பாட்டிலை தலையில் வைத்து குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!

கோபி மஞ்சூரியனை தடைசெய்ய முடியாது... காரணம் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE