57 பந்துகளில் 123 ரன் விளாசல்! ருதுராஜ் கெயிக்வாட் ருத்ரதாண்டவம்... இந்தியா 222 ரன்கள் குவிப்பு

By காமதேனு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிங்

அதன்படி அணி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து ருதுராஜ் கெயிக்வாட் நிலைத்து ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் வெளியேறினார்.

மறுபுறம் ருதுராஜ் கெயிக்வாட் அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய ருதுராஜ் கெயிக்வாட் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெயிக்வாட் 57 பந்துகளில் 123 ரன்களும், திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

ரவி

இதைத் தொடர்ந்து 223 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் 16 ரன்னிலும், ஹெட் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த ஜோஷ் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவருடன் மார்க்கஸ் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். மேக்ஸ்வெல் 27 ரன்னிலும், மார்க்கஸ் 9 ரன்னிலும் களத்தில் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிங், ரவி, அவிஷ்கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


குஷ்பு புகைப்படம் மீது சாணி வீசி, துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்!

பகீர்... 31 துண்டுகளாக வெட்டிப் புதைக்கப்பட்ட பட்டியலின பெண்: கணவன், மனைவி கைது!

மற்றுமொரு ‘நீட்’ தற்கொலை... தொடரும் ‘கோட்டா’ துயரங்களில் இந்த வருடத்தில் இது 28-வது உயிர்ப்பலி

அச்சச்சோ...விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரி, முகத்தில் காயம்!

சர்ச்சை நாயகி பூஜா காந்திக்கு விரைவில் திருமணம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE