ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் 22 வயதில் சதமடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை மும்பை வீரரான முஷீர் கான், 19 வயதில் சதமடித்து முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக இன்று வரையில் சச்சின் டெண்டுகல்கர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 1989-ல் தனது 16வது வயதில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்கிய சச்சின், 24 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏராளம். அதிகபட்சமாக 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 என மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 76 ஆட்ட நாயகன் விருதுகளையும், 20 தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் மிகவேகமாக 10,000 ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில், 11 ஆண்டு மற்றும் 103 நாள்களில் 266 போட்டிகளில் 10,000 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சச்சின். டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை தன் வசமாக்கியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் அடித்தவர்.
இப்படி சச்சின் செய்த சாதனைகளின் பட்டியல் வெகுநீளம். தற்போது இளம் வீரர்கள் சச்சின் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகின்றனர். தற்போது, விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் முறியடித்துள்ளார். 19 வயது, 14 நாட்களே ஆன முஷீர் மும்பையின் இரண்டாவது இன்னிங்ஸில் 255 பந்துகளில் சதம் விளாசினார். ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்குள் சுருண்டது.
இதையடுத்து தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மும்பை அணியில் ரஹானே 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், ஷம்ஸ் முலானி 42 ரன்களும் குவித்தனர். குறிப்பாக இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் 136 ரன்கள் எடுத்தார். இவர் அடித்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 1994/95ல் மும்பை அணிக்காக விளையாடிய 21 வயது 11 மாதங்களே ஆன சச்சின் ரஞ்சி இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ரஞ்சி இறுதிப் போட்டியில் 19 வயது, 14 நாட்களே ஆன முஷீர் கான் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மும்பையின் இளம் வீரர் என்ற பெருமையை முஷீர் கான் பெற்றுள்ளார். சச்சினின் சாதனையை முறியடித்த முஷீர்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?
பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!
சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!
விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!