8 வீரர்களை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் - புதிதாக யாருக்கு வாய்ப்பு?

By காமதேனு

மகேந்திர சிங் தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் வசமிருந்த 8 வீரர்களை விடுவித்துள்ளது.

எம்.எஸ். தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான அணி. அதிகம் முறை (12) ப்ளே- ஆஃப்க்கு தேர்வான அணியாக சிஎஸ்கே இருக்கிறது. மேலும் நடப்பு சாம்பினான சிஎஸ்கே, மும்பை இந்தியனஸ் அணிகள் இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்றோடு ஐபிஎல் அணிகள் தங்களுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் யார் யாரை அணியில் இருந்து விடுவித்துள்ளது குறித்தும் பட்டியலை தர வேண்டும்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 8 வீரர்களை விடுவித்துள்ளது. அம்பத்தி ராயுடு (ரூ.6.7 கோடி), கைல் ஜேமிசன் (ரூ.1 கோடி), சிசாண்டா மலாகா (ரூ.50 இலட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 இலட்சம்), பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.2 கோடி), டுவைன் பிரிடோரியஸ் (ரூ.50 இலட்சம்), பகவத் வர்மா (ரூ.20 இலட்சம்), சுப்ரன்சு சேனாபதி (ரூ.20 இலட்சம்).

இதன்மூலம் ரூ.32.1 கோடி ரூபாய் சிஎஸ்கேவிடம் மீதமிருக்கிறது. 6 இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் 3 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்தாண்டுக்கான மினி ஏலம் வரும் டிச.19ம் தேதி துபையில் நடைபெறுகிறது. இதன் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்த சூழலில் புதிதாக தேர்வாகவுள்ள சிஎஸ்கே வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


சோகம்... மின்கம்பியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!

காதலனின் கண்முன்னே சீரழிக்கப்பட்ட காதலி... இளைஞர்கள் அட்டூழியம்!

தப்பு பண்றீங்க ப்ரோ... ஞானவேல்ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி!

நடிகை வனிதா மீது தாக்குதல்... முகத்தில் காயங்களுடன் பரபரப்பு குற்றச்சாட்டு!

வெறிநாய் கடித்து ரத்தகாயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE