சாம்பியன்ஷிப்பில் சாதித்த இந்திய மகளிர் மல்யுத்த அணி! பிரதமர் வாழ்த்து

By காமதேனு

2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள இந்திய மகளிர் மல்யுத்த அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

20 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஜூனியர் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்றதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்றதற்காக இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். "இந்திய மகளிர் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு மகத்தான வெற்றி, 2023 உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் மல்யுத்த அணி பட்டத்தை வென்றுள்ளது.

7 பதக்கங்களுடன் இணையற்ற செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில் 3 தங்கம். இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஆன்டிம் பங்கல் தக்கவைத்துக் கொண்டது மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று!

இந்த மகத்தான வெற்றி நமது வளர்ந்து வரும் மல்யுத்த வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முழு உறுதி மற்றும் அசாதாரண திறமையின் உருவகமாக நிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE