ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

By காமதேனு

இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி தொடங்கும் இந்த போட்டி தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஸார் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திலக் வர்மாவிற்கு முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாள் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 2ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆசிய தொடர் ஒருநாள் போட்டிகளாக நடத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE