இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் அரைசதத்தை கடந்து சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் இந்த சாதனையை முதன்முறையாக நிகழ்த்தி காட்டியுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையே கடைசி டெஸ்ட் போட்டி, நேற்று முதல் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா, இரண்டாவது நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது.
இதில், ஜெய்ஸ்வால் 57 ரன்கள், ரோகித் 103 ரன்கள், சுப்மன் கில் 110 ரன்கள், சர்பராஸ் கான் 56, படிக்கல் 65 ரன்கள் என முதலில் களமிறங்கிய 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குல்தீப் யாதவ் 27 ரன்களும், பும்ரா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்களுடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.
மூன்றாவது நாள் ஆட்டம், நாளை நடக்க உள்ளது. இந்த இருவரும் நாளை ஆட்டத்தை தொடர உள்ளனர். இதன் மூலம் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட்டையும் இந்தியா வெல்லும் நிலையில் உள்ளது.
இந்த ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் டாப் 5 ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித், சுப்மன் கில், சர்பராஸ் கான், படிக்கல், ஜெய்ஸ்வால், ஆகியோர் அரை சதத்தை கடந்துள்ளனர். இதன் மூலமாக 92 வருட இந்திய டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் கடப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல் 15 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் விளாசியுள்ளனர்.
இதற்கு முன்பாக 1998ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், 1999ல் மொஹாலியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!
மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!
அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!
போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!